தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.