செலிங்கோ லைஃப் இலங்கையில் பிராண்ட் எக்ஸலன்ஸ் என்ற ‘எவரெஸ்ட்டை’ வென்றது. டிசம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) விருதுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ‘ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்’ என்ற விருதையும் மேலும் மூன்று தங்கங்களையும் வென்றுள்ளது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையின் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப், ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக முத்திரை, ஆண்டின் சிறந்த உள்ளூர் வர்த்தக நாமம் மற்றும் ஆண்டின் ‘Agile வர்த்தக நாமம்’ எனத் தெரிவுசெய்யப்பட்டதுடன், வெள்ளி மதிப்புமிக்க ‘CSR பிராண்ட்’டுக்கான வெள்ளி விருதையும் வென்றுள்ளது.