தற்போதைக்கு பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை என அமைச்சர் வலியுறுத்துகிறார். அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி – எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடைபெறவுள்ளது?
பதில் – அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும். ஆனால் ஜனாதிபதியால் பொதுத் தேர்தலையும் நடத்த முடியும். அதற்கு நிறைய காலம் உள்ளது, ஆனால் நாங்கள் அபிவிருத்தித் திட்டத்தில் கவனம் செலுத்துகிறோம்.
கேள்வி – ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வேட்புமனு வழங்க கட்சி விரும்புகிறதா?
பதில் – அவர் கேட்பாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. சொல்லவும் இல்லை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. அதன் பிறகு திருடர்களைப் பிடிக்க முடியும்.