போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் கொழும்பில் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி கொழும்பு நகருக்குள் நுழையும் வாகனங்கள் 108 சிசிடிவி கெமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஊடாக அதற்கான தண்டப்பணம் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்குள் நுழையும் 9 இடங்களிலும் சிசிடிவி அமைப்பு செயற்பாட்டில் உள்ளதாக சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.