பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், ரயிலை பயன்படுத்தும் பயணிகளும் அவமானத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று (24.01.2024 ) பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் மின்சார கட்டணத்திற்காக 877,741.90 ரூபாவுக்கான 321865 என்ற இலக்கத்தை கொண்ட காசோலை ரயில்வே திணைக்களம் வழங்கிய போதிலும் நேற்று பிற்பகல் முதல் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படாமல், மெழுகுவர்த்தியை பயன்படுத்தி ரயில் பணிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றன.