ஆப்கானிஸ்தானில் அரை மணிநேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பைசாபாத் மாகாணத்தில் இருந்து 126 கிலோ மீற்றர் தொலைவில் 80 கிலோ மீற்றர் ஆழத்தில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, பைசாபாத் மாகாணத்தில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் 140 கிலோ மீற்றர் ஆழத்தில் நள்ளிரவு 12.55 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.