Our Feeds


Sunday, January 28, 2024

SHAHNI RAMEES

சனத்நிசாந்தவின் உயிரை பறித்த வாகன விபத்து - மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணை

 




இராஜாங்க அமைச்சர் சனத்நிசாந்தவின் உயிரை பறித்த

வாகனவிபத்தில் தொடர்புபட்டிருக்ககூடிய மற்றுமொரு வாகனம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.


மூன்றாவது வாகனமொன்று விபத்து இடம்பெற்றவேளை காணப்பட்டது என விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களின் சாரதிகளும் தெரிவித்துள்ளதனால் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இராஜாங்க அமைச்சரின் வாகனச்சாரதியும் கொள்கலன் சாரதியும் அதிகவேகமாக வாகனத்தை செலுத்தியமை கவனம் இன்மை அப்பகுதியில் வீதிவிளக்குகள் ஒளிராமை உட்பட பல காரணங்களால் விபத்து  இடம்பெற்றது என தெரிவித்துள்ளனர்.


மூன்றாவது வாகனமொன்று வழிவிட மறுத்தது எனவும் அவர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இராஜாங்க அமைச்சர் மிகமும் மும்முரமாக காணப்பட்டார் அவரது வாகனச்சாரதி ஆறுமணித்தியாலங்களிற்கு மேல் வாகனத்தை தொடர்ச்சியாக செலுத்தியிருந்தார் இதுவும் விபத்திற்கு காரணமாகயிருக்கலாம்


அமைச்சர் நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் அவுஸ்திரேலிய தினநிகழ்வுகளில் கலந்துகொண்டார் பின்னர்  குருநாகலிற்கு சென்றுள்ளார் அங்கிருந்து ஆராச்சிக்கட்டுவ சென்றுள்ளார் அதன் பின்னர் அவர்கள் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தவேளையே விபத்து இடம்பெற்றுள்ளது.


ஜீப் அதிவேகத்தில் பயணித்துள்ளது.


பிணையில் விடுதலை செய்யப்பட்ட கொள்கலன் சாரதி இராஜாங்க அமைச்சரின் ஜீப் கார்ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டதை அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.


இரண்டுகார்களும் மிகவேகமாக செல்வதை அவதானித்து தனது வாகனத்தை இடதுபக்கம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை தான் முன்னே இடதுகைபக்கத்தில்  சென்றுகொண்டிருந்த வாகனத்தை கடந்து செல்ல முற்பட்டவேளை  நான் முன்னே கொள்கலன் ஒன்றை அவதானித்தேன் ஆனால் எனது வாகனம் சமாந்திரமாக பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு வாகனத்துடன் மோதும் என அஞ்சியதால் என்னால் வாகனத்தை வலதுகைபக்கம் கொண்டு செல்லவில்லை இதன் காரணமாக கொள்கலனுடன் மோதநேர்ந்தது என சனத்நிசாந்தவின்  வாகனச்சாரதி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »