உயர்தரப் பரீட்சை வினாத்தாளில் உள்ள வினாக்கள் புகைப்படம் எடுத்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் வினாத்தாள் வெளியாகிய சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில் விவசாய விஞ்ஞானம் பகுதி 1 வினாத்தாளில் உள்ள 50 வினாக்களில் 16 வினாக்கள் புகைப்படம் எடுத்து விநியோகிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.