இது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளதுடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, 2012 முதல் ஜூன் 2023 வரை, தரவுகளை கவனிக்கும் போது, ஒரு லட்சத்திற்கும் குறைவான புதிய பிறப்புகள் பதிவாகியுள்ளன.
2013 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான குறைவு தென்படுகின்றது.
இதன்படி, 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் 83,530 இனால் புதிய பிறப்புகள் குறைந்துள்ளதாகவும், 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் 62,587 இனால் புதிய பிறப்புப் பதிவுகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு பிறப்பு பதிவு 57032 ஆக குறைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.