மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாதணிகளுக்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி காலணி வவுச்சர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அனைத்து காலணி விற்பனை நிலையங்களிலும் செல்லுபடியாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.