பேருவளை நளீமியா கலாபீடத்தில் கல்விபயிலும் மாணவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நளீமியா கலாபீடத்தின் அடிப்படைக் கற்கைகள் மத்திய நிலையம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டதுடன், இதன் மூலம் பாராளுமன்ற முறைமை, சட்டவாக்க முறைமை மற்றும் பாராளுமன்றக் குழுக்கள் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டது.