கப்சோவினால் சமூக ஊடக ஆர்வளர்களுக்கான பயிற்சிப்
பட்டறை ஆரம்பம்!சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் "Youth Media Project" வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(26) கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமான அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வளர்களை கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ் வேலைத்திட்டமானது ஒரு வருட காலமாக இடம் பெறவுள்ளதுடன் இன் நிகழ்வுகளுக்கு வளவாளராக 27ம் ,28ம் திகதிகளில் விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு "Digital Story Telling " சம்மந்தமான தெளிவினை வழங்கி இருந்தார்.