இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.