பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து
தென்னகோனின் பணிநீக்கம் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை பணிநீக்கம் செய்யவும், ஐ.ஜி.யாக நியமனம் செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த மனுவை ஜனவரி 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.