Our Feeds


Thursday, January 18, 2024

News Editor

யால தேசிய பூங்கா மீளத் திறப்பு


 வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பலதுபான யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

யால தேசிய பூங்காவில் உள்ள சிறு நீர்ப்பாசன குளங்களில் கசிவு ஏற்பட்டதால் நுழைவாயில்கள் நீரில் மூழ்கியதை அடுத்து அங்கு அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

பூங்காவிற்குள் உள்ள பிரதான வீதியானது வலையமைப்பு வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »