Our Feeds


Monday, January 1, 2024

News Editor

எரிபொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம்


 இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, ஒக்டேன் 92 ரக நெல் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.


ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.


இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »