சின்னம்மை தடுப்பூசி திட்டம் 83 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்தார்.
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சின்னம்மை தடுப்பூசி திட்டமே வெற்றியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி சின்னம்மை தடுப்பூசி திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் 93 சத வீதமும், கண்டி மாவட்டத்தில் 90 சத வீதமும், குருநாகல் மாவட்டத்தில் 88.7 சத வீதமும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட வேண்டிய 30,455 குழந்தைகள் இன்னும் இருப்பதுடன் , அவர்களில் 25,286 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர் .
தடுப்பூசி போட வேண்டிய குழந்தைகளுக்கு எதிர்வரும் மூன்று வாரங்களில், சனிக்கிழமைகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அப்போது நூற்றுக்கு நூறு வீதம் முழுமையாக இதனை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க முடியும் என்றும் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.