Our Feeds


Thursday, January 18, 2024

News Editor

நீர் கட்டணம் செலுத்தாத 80,000 பேருக்கு தண்ணீர் துண்டிப்பு


 தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

63,150 உள்நாட்டு வாடிக்கையாளர்களும் 17,820 உள்நாட்டில் அல்லாத வாடிக்கையாளர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடிகாலமைப்பு சபையில் இருந்து நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து 1,909 மில்லியன் ரூபா மீளப்பெற வேண்டியுள்ளது.

அத்துடன் நீர் கட்டணத்தை செலுத்தாமையால் 6,118 மில்லியன் ரூபாவை சபைக்கு அறவிட வேண்டியுள்ளது.

அவற்றுள் நீர் வழங்கல் சபைக்கு வைத்தியசாலைகளில் இருந்து 182 மில்லியன் ரூபாவும், பாடசாலைகளில் இருந்து 175 மில்லியன் ரூபாவும், இராணுவம் மற்றும் பொலிஸாரிடமிருந்து 116 மில்லியன் ரூபாவும் வசூலிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று எதிர்கால கொடுப்பனவுகளை தொடர முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »