Our Feeds


Wednesday, January 24, 2024

News Editor

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை!

 

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 15.10. 2012 அன்று அல்லது அண்மித்த தினத்தில் சட்டவிரோதமாக இலங்கைக் கடற்கரையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற மீன்பிடிக் படகை கடத்தி அதிலிருந்த மூன்று மீனவர்களை கொலை செய்து மேலும் சில மீனவர்களை  கடுமையாகக் காயப்படுத்தி குறித்த படகில் அவுஸ்திரேலியா சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 7 மீனவர்களுக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கில் 10வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மரணதண்டனை விதித்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா 2,008,500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணையின் போது அல்லது விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »