Our Feeds


Wednesday, January 31, 2024

ShortNews Admin

 காயமடைந்தோரை இராணுவத் தளபதி நேரில் பார்வையிட்டார்!


கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ. ஆர்.எஸ்.பீ .என்.டி.யூ நேற்று (30) கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.


திறந்த வான் பாய்ச்சலின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இராணுவத் தளபதி, அதிகாரி மற்றும் சிப்பாயிடம் தனித்தனியாகப் பேசி, தனது வருத்ததினை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தார்.


இராணுவத் தளபதி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளைச் சந்தித்து காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்கள் விரைவாக குணமடைய உறுதி வழங்கினார்.


புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி அவர்கள் மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினை அங்கீகரித்ததுடன், காயமடைந்த படையினருக்கு சிறந்த சிகிச்சைகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »