சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு
பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை விதித்தார்.
ஜித்தாவில் தனது மகன் இளவரசர் மிஷாரி, பிரித்தானிய துணைத் தூதர் சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு அவர் அந்த முடிவை எடுத்திருந்தார்.
எனினும் நேற்று (24) சவூதி அரேபியாவின் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சுற்றுலா மற்றும் வர்த்தக தலமாக சவூதி அரேபியாவை நியமிக்கும் திட்டத்துடன் இணைந்து இந்த மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.