Our Feeds


Monday, January 29, 2024

News Editor

6 பல்கலைக்கழக மாணவர்கள் கைது


 சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதானவர்கள் மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.


இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »