மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததாகவும், அதையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புப் பணியினர் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், நிலச்சரிவில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் மண்சரிவில் புதைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது