Our Feeds


Wednesday, January 10, 2024

SHAHNI RAMEES

பண்டாரவளை – பதுளை பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – 4 வாகனங்கள் சேதம்

 



பண்டாரவளை – பதுளை பிரதான வீதிக்கு பண்டாரவளை,

உடுஹுல்பொத்த பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.


அதன்படி இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதோடு, இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.


இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் முச்சக்கரவணடி ஒன்றும் இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.


இவ்வாறு சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், முச்சரக்கரவணிடி அவ்வழியாக பயணித்தது எனவும் தெரியவந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »