நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.
மேற்படி மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்கே குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை (11), மற்றும் வெள்ளிக்கிழமை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இந்த நாட்களுக்கு பதிலாக இம்மாதமே பதில் கல்வி செயற்பாடுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.