வணிக வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பலர் வணிக வளாகத்தை விட்டு வெளியே ஓடியிருப்பினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் அறிந்து பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இருப்பினும் இவ்விபத்தில் சிக்கி 39 பேர் பலியாகினர். மேலும் பலத்த தீக்காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளது.