சவூதி அரேபியாவின் 300 கோடி ரூபா கடனுதவியின் கீழ் அம்பாறை - மஹாஓயா வீதி அபிவிருத்தி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - உஹன - மஹாஓயா வீதியின் (A027) புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில், கெவிலிய மடுவயிலிருந்து மஹாஓயா வரையிலான (A027) திட்டம் ஆரம்பமானது.
மஹா ஓயா 69 சந்தியில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் தலைமையில் அழைக்கப்பட்ட அதிதிகள் முன்னிலையில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்காக சவுதி அரேபியாவின் 300 கோடி ரூபா கடனுதவி பயன்படுத்தப்படவுள்ளது.