மீன்பிடி இழுவை படகிலிருந்து 278 பொதிகளில் 300 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு காலி கடற்பரப்பில் மீட்கப்பட்ட மீன்பிடி இழுவை படகில் இருந்தே குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.