Our Feeds


Monday, January 1, 2024

ShortNews Admin

செங்கடலில் டென்மார்க்க கப்பல் மீது ஹூதிகள் அதிரடி தாக்குதல் - இதுவரை 23 கப்பல்கள் மீது தொடர் ஏவுகணை வீச்சு



செங்கடலில் யமன் எல்லையில் இருக்கும் பாபல் மன்தப் பகுதியினால் டென்மார்க் நோக்கி சென்ற சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சிப் படையினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.


பாலஸ்தீனம் மீதான இனஅழிப்பு தாக்குதல்களை நிறுத்தாத வரையில் செங்கடலில் இஸ்ரேலிய மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான கப்பல்களுக்கு அனுமதிக்க மாட்டோம் எனவும், மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் எனவும் ஹூதிகள் எச்சரித்த நிலையில் அவர்களின் எச்சரிக்கையை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியும் வருகிறார்கள்.


இதுவரை 23 கப்பல்கள் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செங்கடல் பாதுகாப்பு பணியகம் என்றொன்றையும் உருவாக்கியுள்ளன. குறித்த நாடுகள் ஹூதிகளிடமிருந்து கப்பல்களை பாதுகாப்போம் என கூறியுள்ள நிலையில் நேற்று பயணித்த டென்மார்க் கப்பல் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


இதே வேலை, கப்பல் மீது தாக்குதல் நடத்த வந்த ஹூதி படையினரின் 3 படகுகள் மீது அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் இருந்து வந்த ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தியதில் தமது 10 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹூதி படையின் ஊடகப் பேச்சாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளதுடன், இதற்கு பதிலடியாக அமெரிக்கா பெரும் விலை கொடுக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


என்ன நடந்தாலும் காஸாவில் இஸ்ரேல் இனஅழிப்பை நிறுத்தும் வரை எமது தாக்குதல்கள் நிறுத்தப்படாது எனவும், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான அனைத்து கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் எனவும் மீண்டும் ஹூதிகள் எச்சரித்துள்ளனர்.


இதே வேலை ஈரானின் ப்ரஸ் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டியளித்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பலின் கேப்டன் Vice Admiral Brad Cooper ஹூதிகள் அடங்க மறுக்கிறார்கள். நாம் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது ஹூதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம். இதை விட அதிக நாடுகள் நம்முடன் இணைந்தாலும் ஹூதிகளை அடக்குவது சாத்தியமில்லை. என தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் பேசிய Vice Admiral Brad Cooper அவர்கள், செங்கடல் மற்றும் ஏடன் வலைகுடாவில் அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட 5 நாடுகளின் கடற்படை கப்பல்கள் ரோந்து வருகின்றன. நாம் செங்கடலுக்கு வருவதற்கு முன் ஹூதிகள் நடத்திய தாக்குதலை விட இப்போதுதான் அதிக தாக்குதல்களை நடத்துகிறார்கள். அவர்களுடைய தாக்குதல்கள் குறையாது என்பதில் நாமும் தெளிவாக இருக்கிறோம். என்றார்.


ஹூதிகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடத்தி வரும் செங்கடல் பயண கப்பல்கள் மீதான தாக்குதல் காரணமாக கடந்த ஒரு மாதமாக செங்கடல் வழியான பயணத்தை சுமார் 1500 கப்பல்கள் தவிர்த்துள்ளதாகவும் அவரை ஆபிரிக்க நாடுகளை சுற்றி சுமார் 40 நாட்கள் பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அதே வேலை செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சுயேஸ் கால்வாய் பகுதி வருமானத்தில் சுமார் 40 வீதத்திற்கும் அதிகமான வருமானத்தை தாம் இழந்துள்ளதாகவும் எகிப்து தெரிவித்துள்ளது.


இதே வேலை இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இஸ்ரேல் தொடர்ந்தும் காஸாவில் இருக்கும் சுதந்திர போராளிகளிடம் ராணுவ தோல்வியடைந்து வரும் நிலையில் தற்போது பொருளாதாரத்திலும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »