விளையாட்டுத்துறை அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 2 இடைக்கால குழுக்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை கராத்தே தோ சம்மேளனம் மற்றும் ஆகியவற்றின் இடைக்கால குழுக்கள் இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஜூலை மாதம் 28ஆம் திகதி அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கராத்தே சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக முன்னெடுப்பதற்கு இடைக்கால குழுவை நியமித்தார்.
இது தொடர்பான வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து, கராத்தே சம்மேளனத்தின் விவகாரங்கள் தொடர்பில் கையாள கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது