தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட
மண்சரிவில் 18 போ் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து அந்நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் நேற்று முன்தினம்(12) நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் புதையுண்டு 18 போ் உயிரிழந்ததுடன் 35 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் மாயமாகியுள்ளதால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், மழையால் மீட்புப் பணிகளில் இடா்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.