Our Feeds


Tuesday, January 2, 2024

News Editor

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரி பதிவு செய்வது கட்டாயம்


 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் ஊதியம் பெறுவோர் மாத்திரம் இந்த வரிக்கொள்கைக்கு உட்பட்டவர்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நடைமுறைக்கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டட நிர்மாணத்திற்கு அனுமதி கோரும் போதும், மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்யும் போதும், உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் காணி உரிமையைப் பதிவு செய்தலின் போதும் வரி செலுத்துனர் அடையாள இலக்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

WWW.IRE.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டோர், வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »