பங்களாதேஷின் டாக்காவில் உள்ள வாக்குச்சாவடி
உள்பட 14 வாக்குச்சாவடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.நாட்டின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், நேற்றைய தினம் இந்த தீ மூட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை, பயணிகள் ரயிலுக்கும் தீ வைக்கப்பட்டது, இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.
குறித்த தீவைப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி உட்பட 06 கட்சி செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.