பிலிப்பைன்ஸில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 5 சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்துள்ளனர் மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர்.
அந்நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த மங்கயோ நகரப் பகுதியில் ஏற்பட்ட இம்மண்சரிவில் கிறிஸ்தவ பிராத்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வீடு புதையுண்டதாகவும், இதில் சிக்கி குறித்த 10 பேரும் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.