கடந்த டிசம்பா் மாதம் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 10,000 போ் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரெஸ் அதனோம் கேப்ரியாசஸ் கூறுகையில், ‘புதிய வகை கொரோனா பரவலால் கடந்த மாதத்தில் மட்டும் 10,000 போ் உயிரிழந்தனா்.
விடுமுறைக் காலத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதாலும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த மாதம் அதிகரித்துள்ளது.
கொரோனாவின் தீவிர பரவல் காலத்திலான சராசரி மரணங்களைவிட இது குறைவாக இருந்தாலும், தற்போதைய சூழலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது ஏற்புடையது அல்ல’ என்றாா்.