சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட
நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் மேலும் 220 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.