Our Feeds


Sunday, December 24, 2023

News Editor

அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து STF ஐ நீக்க திட்டம்


 நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடந்த (22) கூட்டத்தில் இதுகுறித்து ஆராயப்பட்டது.

இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கும், அதன்போது செயல்படவும் குற்றங்களைத் தடுப்பதற்கும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பணிகளிலிருந்து விசேட அதிரடிப் படையினரை நீக்கி, அந்த பணிகளை முன்னெடுப்பதற்கான மாற்றுவழி தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

இதற்காக முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்த பணிகளைப் பொறுப்புடன், உரிய வகையில் முன்னெடுப்பதற்கும், இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முகாமைத்துவம் செய்யக்கூடியதுமான சரியான வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் விரைவில் உருவாக்குமாறு சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »