கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து செயல்படும் RISE UP ACADEMY யின் 2வது ஆண்டு பரிசளிப்பு விழாவும் விசேட கண்காட்சியும் 16.12.2023 அன்று கொழும்பு 02 கிச்சிலான் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முழுமையாக பெண்களினால், இலவசமாக நடத்தப்பட்டுவரும் இக்கல்வி நிலையத்தின் மூலம் ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கான குர்ஆன் மத்ரஸா பெண்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான இஸ்லாமிய கற்கை நெறிகள் என்பன நடத்தப்பட்டு வரும் அதே வேலை அஹதியா, பெண்கள் வகுப்பு, பெண்களுக்கான உடற்பயிற்சி, சமையல் கலை, தையல் கற்கைகள் என பல்வேறு துறைசார்ந்த வகுப்புகளும் இலவசமாகவே நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
கல்வியகத்தில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக CCAS CAMPUS நிறுவனத்தின் நிறுவனர் Mr. NAJIMUDEEN மற்றும் விசேட அதிதிகளாக சட்டத்தரணி நுஷ்ரா சரூக் மற்றும் பிரபல எழுத்தாளர் வசந்தி தயாபரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சங்களாக குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.