புதிய JN-1 வகை கொவிட் விவகாரத்தை கையாள சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சின் செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை உட்பட 19 வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, புதிய JN-1 கொவிட் வகை இலங்கைக்குள் பிரவேசித்துள்ள போதிலும், அது தொடர்பான மரபணு பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதாரத் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.