மாத்தறை சிறைச்சாலையில் பல கைதிகள் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
மாத்தறை சிறைச்சாலையில் 17 கைதிகள் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், மாத்தறை சிறைச்சாலையில் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த 48 மணித்தியாலங்களில் சிறைச்சாலையில் இதே போன்ற அறிகுறிகளுடன் கூடிய கைதிகள் அடையாளம் காணப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 கைதிகளில் 02 பேர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் வைத்தியசாலையின் சாதாரண பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
கைதிகளின் உடல்நிலை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் இன்னும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.