நாட்டில் பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் கபில நாவுதுன்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் பெறப்பட்ட தடை உத்தரவின் அடிப்படையில் மாதாந்த பாவனைக் கட்டணத்தை அறவிடுவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாகவே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.