கல்வெஹர, அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது கணவர் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், பலப்பிட்டிய மங்கட கடற்கரையில் நேற்று புதன்கிழமை (20) குறித்த பெண்ணின் சடலத்தை அஹுங்கல்ல பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அறுவைச் சிகிச்சையின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், அறுவை சிகிச்சையின் வலி தாங்க முடியாதுள்ளதாக தெரிவித்து அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.