தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவனர்
நடிகர் விஜயகாந்த் உயிரிழப்பு.தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவனர் நடிகர் விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர் சுகயீனமுற்றிருந்த விஜயகாந்த் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அது பலனளிக்கவில்லை
நடிகரான விஜயகாந்த் அரசியலிலும் நுழைந்து "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.