போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையை 2024 ஜனவரி 4 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த பிணை மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, விசாரணை ஜனவரி 4, 2024க்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சவேந்திர விக்கிரமவும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்னவும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.