எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.