Our Feeds


Thursday, December 21, 2023

SHAHNI RAMEES

பேஸ்புக் நிறுவனத்துக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

 

இணையத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடப்பட்டுள்ள சமூக வலைத்தள கணக்குகள் குறித்த அனைத்துத் தகவல்களையும்  வழங்குமாறு  பேஸ்புக் நிறுவனத்துக்கு  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்கவினால் இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையத்தைப் பயன்படுத்தி 'புஸ் புத்தா', 'புஸ் புத்தாவைப் பின்பற்றுபவர்கள்' என்ற பெயர்களில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் பௌத்தம் மற்றும் புத்தரை அவமதிக்கும் வகையிலான பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »