Our Feeds


Friday, December 1, 2023

SHAHNI RAMEES

அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிருந்து நீக்க ஐக்கிய தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை...!

 


தங்கம் கடத்­திய குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான புத்­தளம்

மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் எம். நயீ­முல்லாஹ் இணக்கம் வெளி­யிட்­டுள்­ள­தாக தெரியவருகிறது.


இதற்­க­மைய, கொழும்பு மாவட்ட நீதி­மன்­றத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­மினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில் சட்­டத்­த­ர­ணி­யொ­ருவர் ஆஜ­ரா­வ­தற்­கான பதி­லி­யொன்றும் (Proxy) பிர­தி­வா­தி­களில் ஒருவர் என்ற அடிப்­ப­டையில் நயீ­முல்­லாஹ்­வினால் வழங்­கப்­பட்­டுள்­ளது.


இந்தப் பதிலி நயீ­முல்­லாஹ்வின் சட்­டத்­த­ரணி ஊடாக கொழும்பு மாவட்­டத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­துடன் இந்த வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும் 11 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதி­பதி முன்­னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.


ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்­புடன் (முன்­னைய பெயர் முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு) அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மேற்­கொண்ட தீர்­மா­னத்தின் பிர­காரம், புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அலி சப்ரி ரஹீம் தெரி­வு­செய்­யப்­பட்டார்.


எனினும் தங்கம் கடத்­திய குற்­றச்­சாட்டின் கீழ் அலி சப்ரி ரஹீமை கட்­சியின் உறுப்­பு­ரி­மையில் இருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அண்­மையில் தீர்­மா­னித்­தது.


இது தொடர்­பி­ல் கடந்த நவம்பர் 4 ஆம் திகதி முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் எம். நயீ­முல்­லாஹ்­விற்கு அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­த­துடன், பாரா­ளு­மன்ற செய­லா­ள­ருக்கு உட­ன­டி­யாக அறி­வித்து அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யினை வறி­தாக்­கு­மாறும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.


இவ்­வா­றான நிலையில் மேற்­படி இரண்டு கட்­சி­க­ளி­னதும் உறுப்­பினர் பத­வியில் இருந்து நீக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக 14 நாட்கள் இடைக்­கால தடை உத்­த­ர­வினை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி றஹீம் கடந்த 13 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்வினை கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »