நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக, பதுளை மாவாட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்த்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக பதுளை அனார்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் பதுளை - தல்தென வீதியிலுள்ள வீட்டொன்று சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை - மஹியங்கனை வீதியில் பதுளையில் இருந்து 7 ஆம் கட்டை வரையிலான பகுதியில் இடைக்கிடை மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளமையினாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினாலும் அந்த வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைதுவ மத்திய நிலையம் தெரிவிந்துள்ளது.