நாடு முழுவதும் அண்மையில் இடம்பெற்ற மின் துண்டிப்புக்கு தாமே காரணம் என மின்சார சபை ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 09 ஆம் திகதி 3 மணி நேரதுக்கு மேலான மின் துண்டிப்பு இடம்பெற்றிருந்தது. பிரதான மின் விநியோக பிரிவில் ஏற்பட்ட கோளாரின் காரணமாகவே இந்த திடீர் மின் துண்டிப்பு இடம்பெற்றிருந்ததாக மின்சார சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.