பண்டிகை காலத்தில் பேக்கரி தொழிற்றுறை பெரும் வீழ்ச்சியை சந்தித்தாகவும், கேக் கொள்வனவு 75 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த வருடங்களை விட கேக் விற்பனை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரி உரிமையாளர்ளுக்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் உள்ளூர் முட்டை 55 ரூபாய்க்கு வாங்கி குறைந்த விலையில் கேக்கை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.